பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் ஒரு மாத காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் நடாஷா எத்ரிசூரியவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், பிணை கோரிக்கையை எதிர்க்கப் போவதில்லை என தெரிவித்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஒரு இலட்சம் ரூபா பிணையில் அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.
ஜனாதிபதியின் சட்டத்தரணி அனுஷ பிரேமரத்ன சமர்ப்பித்த பிணை மனுவை பரிசீலித்து, சந்தேகநபருக்கு பிணை வழங்கிய நீதிபதி உடனடியாக தீர்ப்பை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1