26.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

தலைகீழாக நின்றும் ரணில் அரசுக்கு மக்கள் அங்கீகாரம் குறைந்த மட்டத்திலேயே: ஆய்வில் வெளியான தகவல்!

தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்களின் அங்கீகாரம் அதிகரித்துள்ளதாக சுயாதீன ஆய்வு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மற்றும் இந்த ஆண்டு பெப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் அங்கீகாரம் இரட்டிப்பாகியுள்ளதாக அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், அந்த அதிகரிப்பின் பின்னரும் அரசிற்கான அங்கீகாரம் வெறும் 21 சதவீதமாகவே உள்ளது.

VERITE RESEArch நடத்திய கடந்த ஜூன் மாத ‘நாடு என்ன நினைக்கிறது’ என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளிலேயே இந்த முடிவுகள் கிடைத்துள்ளன.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மற்றும் இந்த ஆண்டு பெப்ரவரியில் தற்போதைய அரசின் செயல்பாடுகளுக்கு மக்களின் ஒப்புதல் 10 சதவீதமாக இருந்தது, ஜூன் மாதத்தில் அது இரு மடங்காக அதிகரித்துள்ளது.

நாட்டில் நடைபெறும் பணிகள் குறித்த மக்களின் அங்கீகாரமும் அதிகரித்திருப்பது ஆய்வு முடிவு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கந்த ஒக்டோபரில் 4 சதவீதமாக இருந்த மக்கள் அங்கீகாரம், கந்த பெப்ரவரியில் 7 சதவீதமாக உயர்ந்து, ஜூன் மாதத்தில் நாட்டுப் பணிகள் நடைபெறுவதற்கான மக்களின் அங்கீகாரம் 12 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஜூன் மாத முடிவுகளின்படி, நாட்டின் பொருளாதாரத்தின் மீதான மக்களின் நம்பிக்கை இன்னும் 43.8 என்ற எதிர்மறை மட்டத்தில் உள்ளது, ஆனால் கடந்த ஒக்டோபர் மற்றும் பெப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில், இது தெளிவான வளர்ச்சி நிலை என்று ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் Gallup இன்ஸ்டிட்யூட் நாட்டின் பொதுக் கருத்தைக் கேட்பதற்கு பயன்படுத்தும் கேள்விகள் மற்றும் கணக்கீடுகளை, இலங்கைக்கு ஏற்றவாறு தயாரித்து இந்தக் கணக்கெடுப்பை நடத்தப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

east tamil

வெலே சுதா, மனைவிக்கு 8 வருட சிறைத்தண்டனை!

Pagetamil

தாயை மிரட்டி யுவதியை கடத்திய காதலன் கைது

east tamil

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் – ஜோசப் ஸ்டாலின்

east tamil

‘இளம் பெண்களை நிர்வாணமாக்கி….’- வெளிநாட்டு வேலைக்கு சென்று திரும்பிய தமிழ் பெண் வெளியிட்ட அதிர்ச்சிக் கதைகள்!

Pagetamil

Leave a Comment