திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கணவன் மற்றும் மனைவி காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து-அனுராதபுரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது காற்றின் வேகத்தினால் மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் வேகமாக வந்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தின் போது ஹொரவ்பொத்தான-கல்பே பகுதியைச் சேர்ந்த 50 மற்றும் 55 வயதுடையவர்கள் எனவும் தெரிய வருகின்றது.
விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-அப்துல்சலாம் யாசீம்-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1