பயாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல வீடுகளை உடைத்தமை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் களுத்துறை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
‘பொதுவில களுவா’ என அழைக்கப்படும் 22 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெசாக் மற்றும் பொசன் காலங்களில் சந்தேகநபர் இவ்வாறு பல திருட்டுகளை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நபர் எந்த வேலையும் செய்யாமல் பல சொத்துக்களை குவித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணையில் அனைத்து தகவல்களும் தெரியவந்துள்ளது.
இவரால் திருடப்பட்ட சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பல கைத்தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்க நகைகள் வெவ்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்த பின்னர், அவற்றில் பெரும்பாலானவை உருக்கி வேறு நகைகள் செய்யப்பட்டுள்ளன.
திருட்டுச் சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட அதிக பெறுமதியான மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இன்று (04) களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.