பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்க ஜெல் திரவம் அடங்கிய 04 பொதிகளை தனது உடலின் அந்தரங்க பகுதியில் மறைத்து வைத்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச் சென்ற விமான நிலைய கடமையில்லா வர்த்தக நிலைய ஊழியரான யுவதி ஒருவரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதுடைய இந்த யுவதி கட்டுநாயக்க விமான நிலைய டூட்டி ப்ரீ மாலில் அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் கடையில் பணிபுரிபவராவார்.
இன்று காலை 08.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 05 கிலோவிற்கும் அதிகமான தங்க ஜெல் அடங்கிய 04 பொதிகளை உடலின் அந்தரங்க பகுதியில் மறைத்துக் கொண்டு அவர் புறப்பட்டுச் செல்லும் போது விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று இந்தச் சம்பவத்தை விமான நிலைய பாதுகாப்பு கமெராவில் அவதானித்து, அவரை தடுத்து நிறுத்தினர்.
தற்போது, இந்த யுவதியும், தங்க ஜெல்லும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.