பெண்களின் ஆடையை அணிந்தபடி நாத்தண்டி வெலிபன்னாகஹமுல்ல சந்தியில் அநாதரவாக இருந்த வயோதிபர் ஒருவர் துனகதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதுளை பிரதேசத்தில் வசிக்கும் வயோதிபரை உடுபத்தாவ உள்ளூராட்சி சபையின் பணி நிர்வாகி ரொஷாந்த மனோஜ் அரவிந்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
70-75 வயதுக்கு இடைப்பட்டவர் என மதிப்பிடப்பட்ட இந்த முதியவர் கண்டுபிடிக்கப்பட்ட போது, அவர் அணிந்திருந்த பெண்களின் ஆடைகளில் மலம் காணப்பட்டது.
தரையில் படுத்து புலம்பிக்கொண்டிருந்த நபரை சுற்றியிருந்த இளைஞர்களின் உதவியுடன் குளிப்பாட்டி சுத்தப்படுத்தியதாகவும், அவர் பட்டினியால் வாடியதால், அவருக்கு உணவும் பானமும் கொடுத்து உடனடியாக நோயாளர் காவு வண்டியில் மருத்துவமனைஅழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்ததாகவும் அரவிந்த தெரிவித்தார். .
அவரிடம் தகவல் கேட்ட போது அவர் பதுளையைச் சேர்ந்த அபேரத்ன பண்டார எனத் தெரிவித்ததாக அரவிந்த மேலும் தெரிவித்தார்.
பதுளை பிரதேசத்தில் வசிப்பதாக கூறிக்கொள்ளும் தான் அந்த பகுதிக்கு எப்படி வந்தேன் என்ற தகவலை தெரிவிக்கவில்லை என அவர் கூறினார்.