பதுளை பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
எல்ல ஹல்பே பகுதியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த கார் ஒன்று ஹலிலெல கந்தாதேவி ஆலயத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காரில் பயணித்த 52 வயதுடைய நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த இரு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த இரு பெண்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
பதுளை பிரதேசத்தில் உள்ள தேவாலயமொன்றுக்கு சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹலிலெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1