முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் நீர்வழங்கல் வடிகாலமைப்புசபையின் குழாய் இணைப்புக்காக நிலத்தை அகழ்ந்த போது, மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று இந்த சம்பவம் நடந்தது.
யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களே மீட்கப்பட்டுள்ளன. அது பெண் போராளியொருவரின் எச்சங்களாக இருக்கலாமென கருதப்படுகிறது.
இதையடுத்து, அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டது. முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டு, இன்று அகழ்வு பணிகள் நடக்கவுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1