கழுத்தில் குத்தப்பட்ட அரிவாளுடன் பெண்ணொருவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
தெலங்கானாவின், சிரிசில்லா மாவட்டம், எல்லாரெட்டிப்பேட்டை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
தனது மனைவியை கொல்லும் நோக்கத்துடன் கணவன் அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் மனைவியின் கழுத்தில் பாய்ந்த அரிவாளுடன் அவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இந்த தம்பதி சில காலமாக தமக்குள் சண்டையிட்டுள்ளனர். உழைக்கும் பணத்தில் மது அருந்திவிட்டு, மனைவியை உதைப்பதை வாடிக்கையாக கொண்ட கணவர் அவர்.
புதன்கிழமை காலை வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய கணவன், மனைவியை அரிவாளால் தாக்கினார். மனைவியின் பின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். அவர் அலறிய சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்தனர். இதையடுத்து கணவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
படுகாயமடைந்த மனைவி உள்ளூர் தனியார் வைத்தயசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலை மோசமாக இருந்ததால், அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கரீம்நகர் வைத்தயசாலைக்கு மாற்றப்பட்டது. மருத்துவர்கள் பலத்த முயற்சி மேற்கொண்டு கழுத்திலிருந்த அரிவாளை அகற்றினர்.