நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
பிரபல நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும், ஐஸ்வர்யாவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
சில காலமாக இருவரும் காதலித்து வருவதாகவும், இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரின் சம்மதமும் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. விரைவில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து வரவில்லை.
உமாபதி ராமையா 2017ஆம் ஆண்டு ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நான்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘தேவதாஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அர்ஜூன் தொகுத்து வழங்கிய சர்வைவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உமாபதியும் போட்டியாளர்களில் ஒருவர். இதன் பின்னர்தான் அர்ஜூன் குடும்பத்துடன் ராமையா குடும்பம் நெருங்கி பழகியதாகவும், இதன் பின்னர் உமாபதி- ஐஸ்வர்யா காதலில் விழுந்ததாகவும் தெரிய வருகிறது. கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலிக்கிறார்கள்.