25.3 C
Jaffna
February 5, 2025
Pagetamil
கிழக்கு

கதிர்காமம் பாத யாத்திரையில் ஒருவர் பாம்பு தீண்டி பலி!

பொத்துவில் உகந்தை முருகன் ஆலையத்தில் இருந்து கதிர்காமத்துக்கு காட்டு வழியாக பாதை யாத்திரை சென்ற ஆண் ஒருவர் மீது நேற்று (22) மாலை 6 மணிக்கு குமுக்கன் வனப்பூங்கா இந்துகோவில் பகதியில் வைத்து பாம்பு தீண்டிதில் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய லிங்கசாமி கேதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமது நேர்த்திக்கடனை முடிப்பதற்காக உகந்தை முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்துற்கான பாதையாத்திரையை ஆரம்பித்து சென்று கொண்டிருந்த நிலையில்  நேற்று (22) மாலை 6 மணியளவில் குமுக்கன் வனப்பூங்கா இந்துகோவில் பகுதியில் காலில் பாம்பு ஒன்று தீண்டியதையடுத்து மயக்கமடைந்துள்ளர்.

இதனையடுத்து அந்த பகுதியில் முகாமிட்டு மருத்துவ சேவையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டியில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் வழியில் உயிரிழந்த நிலையில் வைத்திய சாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளனர்.

இதே வேளை இரு தினங்களுக்கு முன்னர் கதிர்காம காட்டுவழி பாதயாத்திரையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

திருகோணமலையில் நேரிய பெற்றோரியம் பயிற்சி

east tamil

வாழைச்சேனையில் குடும்பத் தகராறு காரணமாக 63 வயது நபர் கொலை

east tamil

திருகோணமலையில் அனைத்து மத உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பினால் சுதந்திர தின நிகழ்வு

east tamil

மட்டக்களப்பில் மூவின மக்களின் பங்கேற்புடன் சுதந்திர தின கொண்டாட்டம்!

east tamil

Leave a Comment