மெதிரிகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிசேன மீன்பிடி கிராமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த 36 வயதுடைய பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் நேற்று மாலை தனது தாய் வீட்டில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது, கழிவறைக்கு பின்னால் மறைந்திருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கள்ளக்காதல் விவகாரம் காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சந்தேக நபரை பிடிக்க விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மெதிரிகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1