28.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

பிக்குவின் வங்கிக் கணக்கில் ரூ.60 மில்லியன்!

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்கள் ஊடாக கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜாங்கனை  சதாரதன தேரரின் மூன்று கணக்குகளில் ஒரு வருட குறுகிய காலத்திற்குள் 60 மில்லியன் ரூபா பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.

இந்த மூன்று கணக்குகளுக்கு மேலதிகமாக அவருக்கு மேலும் பல வங்கிக் கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அந்த வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் தொடர்பான அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அந்த வங்கிக் கணக்குகளிலும் அதிகளவு பணம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கிக் கணக்குகளில் அதிகளவு பணம் வெளிநாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பணம் கொடுத்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் மத மற்றும் தேசிய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் இந்தப் பணம் அவருக்கு அனுப்பப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இருந்தும் பிக்குவின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் கிடைத்துள்ளதாகவும், பாதாள உலகக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களும் இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மின் கட்டணங்கள் இடைநிறுத்தம்

east tamil

முட்டையின் விலையில் வீழ்ச்சி

east tamil

கணவர் மீது முறைப்பாடு… விசாரிக்க சென்ற பொலிசாருக்கு கடி: லைக்கா கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Pagetamil

ஜேவிபி ஆட்சியை தக்க வைக்க யாழில் சங்கம் அமைத்த குழு!

Pagetamil

புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும்

Pagetamil

Leave a Comment