கொழும்பு அவிசாவளை வீதியில் ஹன்வெல்ல அம்குகம பகுதியில் இன்று (9) காலை லொறி ஒன்றும் இ.போ.ச பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த லொறி ஒன்று அக்கரப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இரண்டு வாகனங்களின் சாரதிகளும் காயமடைந்துள்ளனர். பயணிகள் 20 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் நவகமுவ மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1