Pagetamil
இலங்கை

கஜேந்திரகுமார் மீதான தாக்குதலை வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே கண்டிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குலை வடமாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கண்டித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,

அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சியையும் அவர் மீதான தாக்குதலையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இன்று (நேற்று- ஜூன் 2) மாலை யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் மக்கள் சந்திப்பில் அவர் ஈடுபட்டிருந்த போது அங்கு புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அவர் அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன் அவர் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவதை நாம் இலங்கை அரசின் ஜனநாயக விரோத செயலாகவே பார்க்கின்றோம்.

நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் இவற்றை தடுக்க முன்வரவேண்டும். இவ்வாறு தமிழர் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் அரச புலனாய்வாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதலானது ஏனைய அரசியல் தலைவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் விடுக்கும் அச்சுறுத்தலாகவே நாம் பார்க்கின்றோம் என்றுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஏப்ரலில் உள்ளூராட்சி சபை தேர்தல்

east tamil

தேர்தல் செலவு அறிக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கான விசாரணை ஆரம்பம்

east tamil

காலி கோட்டையின் பழைய கோட்டை நுழைவாயில்களுக்கு தற்காலிக பூட்டு!

east tamil

கள்ளக்காதலியில் சந்தேகம்; கத்தியால் குத்த முயற்சித்த கள்ளக்காதலன்; தகராறில் 13 வயது சிறுமி பலி

east tamil

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவர்களுக்கு அரசினால் நிவாரண தொகை

east tamil

Leave a Comment