Pagetamil
இலங்கை

நெல்சிப் ஊழல்: வடக்கு அதிகாரிகள் இருவரிடம் குற்றப்பத்திரம் கையளிப்பு!

2012- 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கில் முன்னெடுக்கப்பட்ட நெல்சிப் திட்டத்தில் முறைகேடுகள் இடம் பெற்றன என்ற குற்றச்சாட்டு தொடர்பில் 2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட விசாரணை குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில் வடக்கில் உள்ள இரு அதிகாரிகளுக்கு குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட நெல்சிப் திட்டத்தில் முறைகேடுகள் இடம் பெற்றன என்ற குற்றச்சாட்டு 2015 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. அது தொடர்பில் அப்போதைய வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ. பக்திநாதனாலும் அப்போதைய ஆளுநராலும் விசாரணை குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

இதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகள் 2016 ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டிருந்தன. விசாரணை அறிக்கைகள் நிர்வாக அதிகாரிகளின் நியமன அதிகாரியான உள்நாட்டு அலுவலல்கள் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது குற்றப்பத்திரம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக வடக்கு மாகாண பிரதமர் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு விளக்கம் கோரப்பட்டுள்ளது.

அப்போதை யாழ் மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் அப்போதைய வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டு பத்திரமே தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சிலிருந்து நேரடியாக இருவருக்கும் முற்கூட்டிய தகவலாக ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வடக்கு மாகாண பிரதமர் செயலாளர் ஊடாக, அப்போதைய உள்ளூராட்சி ஆணையராக இருந்தவருக்கு மாற்றமே நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக விளக்கம் கோரிய குற்ற பத்திரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இனவாத அரசியலின் பிரதிபலிப்பு: ஜேவிபியின் முகத்தை வெளிப்படுத்தும் கஜேந்திரகுமார்

east tamil

வறுமை கல்விக்கு தடையாக அமையக்கூடாது – வடக்கு ஆளுநர்

east tamil

வடமேல் மாகாணத்தில் விசேட குற்றத்தடுப்பு பிரிவு – ஆனந்த விஜேபால

east tamil

2025ல் முதல் 15 நாட்களில் 65 வீதி விபத்துக்கள் – 68 பேர் உயிரிழப்பு

east tamil

இ-டிக்கெட் மோசடி- பொலிஸ் அதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தம்

east tamil

Leave a Comment