இளைஞன் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட இளைஞனின் காதலியின் பெற்றோரும், மற்றொருவருமே கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுகஸ்தோடடை பகுதியில் இந்த கடத்தல் சம்பவம் நடந்தது.
தனியார் வகுப்பு முடிந்த பின்னர் 18 வயதான காதலியும், 17 வயதான காதலனும் சந்தித்துள்ளனர். ஆள்நடமாட்டமற்ற வீதியில் கைகோர்த்தபடி இருவரும் நடந்து சென்று கொண்டிருந்த போது காதலன் கடத்தப்பட்டார்.
காதலியின் தாய், தந்தை, அவர்களது நண்பர் ஒருவர் வாகனத்தில் வந்து, காதலர்களை பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
யட்டவல பிரதேசத்திலுள்ள தமது வீட்டுக்கு காதலனை அழைத்து சென்று, கடுமையாக தாக்கியுள்ளனர்.
பின்னர் அதே வாகனத்தில் இளைஞனை ஏற்றி வந்து, தித்தவல பகுதியிலுள்ள இளைஞனது வீட்டில் ஒப்படைத்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான மாணவன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு காதலியின் தாய், தந்தை, அவர்களது நண்பரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தினர். அவர்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.