யாழ்ப்பாண மாவட்டத்தில் சனி ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் இடம் பெறும் இடங்களுக்கு அண்மையில் பொலிசாரின் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு கடமைகளை மேற்கொள்வதென ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீரமானிக்கப்பட்டுள்ளது.
இன்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது, ஒருங்கிணைப்புக்குழு தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையை தொடர்ந்து, இதனை செயற்படுத்துவதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் உறுதியளிக்கப்பட்டது.
கடந்த வாரம் முதல் தனியார் வகுப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிசாரின் ரோந்து நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1