வயல் காவலில் ஈடுபட்ட விவசாயி, அதிகாலையில் வீட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக வவுனியா-மதவாச்சி பொலிசார் தெரிவித்தனர்.
ஹல்மில்லையில் வசிக்கும் டிங்கிரி பண்டகே ஜயவர்தன என்ற 73 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (30) 5.30 மணியளவில் இந்த விவசாயி வயலில் இருந்து வீடு திரும்பியுள்ளார். வயல் ஊடாக 200 மீற்றர் நடந்து கிரவல் வீதியை அடைந்த போது, அங்கு நின்ற யானை அவரை தாக்கியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1