கடுகன்னாவ சாருளியெத்த புத்தர் சிலைக்கு அருகாமையில் 18 வயது யுவதியை முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளனர்.
யுவதி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியில் ஒருவர் தன்னை வன்புணர்ச்சி செய்த பின்னர், பொத்தப்பிட்டிய குருலு ஏரிக்கு முன்பாக மற்ற மூவரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக யுவதி பொலிஸில் தெரிவித்துள்ளார்.
இந்த நான்கு பேரும் போதையில் இருந்ததாக யுவதி பொலிஸாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1