சூடானின் இராணுவம் போர்நிறுத்தம் மற்றும் மனிதாபிமான அணுகல் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதை நிறுத்தி வைத்துள்ளது.
மே மாத தொடக்கத்தில் சவூதி அரேபிய துறைமுக நகரமான ஜெட்டாவில் இராணுவத்துக்கும், துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையில் ஏற்படுத்தப்பட்ட இரண்டு குறுகிய கால போர்நிறுத்த ஒப்பந்தங்கள் மீண்டும் மீண்டும் மீறப்பட்டன.
திங்கட்கிழமை காலாவதியாகவிருந்த ஒரு வாரகால போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஐந்து நாட்களுக்கு நீட்டிக்க இராணுவமும் RSFம் ஒப்புக்கொண்டிருந்தன.
இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர், பிரிகேடியர் நபில் அப்தல்லா, AP செய்தி நிறுவனத்திடம், RSF மனிதாபிமான போர்நிறுத்தத்தை தொடர்ந்து மீறி தலைநகர் கார்ட்டூமில் மருத்துவமனைகள் மற்றும் பிற குடிமக்கள் உள்கட்டமைப்புகளைத் தொடர்ந்து ஆக்கிரமித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.
இராணுவம் முந்தைய போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறியதாக RSF குற்றஞ்சாட்டியுள்ளது.