ஆடுகளுக்கு காப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளதாக கமநல காப்புறுதி சபை தலைவர் டபிள்யூ. எம். எம். பி. வீரசேகர தெரிவித்தார்.
விவசாயத்துறையுடன் தொடர்புடைய பல துறைகளுக்கு புதிய காப்புறுதி வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தற்போது விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை ஆரம்பித்துள்ளதாகவும் தலைவர் வீரசேகர, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்தார்.
விவசாய அமைச்சுக்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபையின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.
கால்நடை முகாமைத்துவத்தில் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் 70,000 ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆடுகளுக்கு காப்புறுதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வீரசேகர தெரிவித்தார்.
பொதுவாக ஒரு ஆட்டின் பெறுமதி சுமார் ஒரு இலட்சம் ரூபாவாகும்.ஆடுகளுக்கு வருடாந்த காப்புறுதிப் பங்காக 400 ரூபாவுடன் காப்புறுதி செய்ய வாய்ப்பு வழங்குவதுடன் ஆடுகள் திருட்டுபோனாலோ அல்லது திடீர் மரணம் ஏற்பட்டாலோ அதிகபட்ச இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆடுகளை இலவசமாக வழங்கும் திட்டத்திற்காக இந்த ஆண்டு 150 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்கியுள்ளது.