26.3 C
Jaffna
December 25, 2024
Pagetamil
இந்தியா

கனடா செல்ல முயன்ற 10 இலங்கைத் தமிழர்கள் புது டில்லி விமான நிலையத்தில் கைது!

புது டில்லி விமான நிலையம் வழியாக கனடாவிற்குப் பயணம் செய்யும் நோக்கத்துடன், விமான நிலைய பகுதியில் தங்கியிருந்த 10 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் சென்னையில் வசிக்கும் இலங்கைத் தமிழரான மகேந்திரராஜா என்ற ஏஜெண்டும் அடங்குவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏரோ சிட்டிக்கு அருகில் தங்கியிருந்த 10 பேர், அங்கு தங்கியிருந்தற்கான சரியான காரணத்தை விளக்க முடியவில்லை என்று அவர்கள் கூறினர்.

“அவர்கள் தங்கள் அடையாளத்தைக் காட்டும்படி கேட்கப்பட்டனர், ஆனால் அவர்கள் தங்கள் அடையாளத்தைக் காட்டவில்லை. சந்தேகத்தின் பேரில், சரிபார்ப்பதற்காக அவர்கள் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர், ”என்று ஒரு போலீஸ் அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந்த நபர்களை சென்னை விமான நிலையத்திற்கு வரும்படி ஏஜெண்ட் கூறினார். அங்கு ஒரு முகவர் அ என கூறப்பட்டுள்ளது.

இவர்கள் வெவ்வேறு திகதிகளில் இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை அடைந்ததாகவும், மகேந்திரராஜா ஞாயிற்றுக்கிழமை விமான நிலையத்திற்கு வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள பஹர்கஞ்சில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் ஏரோ சிட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்,

“இன்று சில பிரச்சனைகள் காரணமாக கனடாவிற்கு பயணிக்க  முடியாது“ என்று முகவர் இந்த நபர்களிடம் கூறி, ஹோட்டலுக்குச் செல்லும்படி கூறினார்.

“அவர்கள் அனைவரும் இந்திய குடியேற்றத்துறையை ஏமாற்றி கனடா செல்ல விரும்பினர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 10 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,” என, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல் சம்பவம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

3 கணவர்களிடமும் இயற்கைக்கு மாறான உறவு குற்றச்சாட்டு: பெண் கைது!

Pagetamil

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

இன்ஸ்டா காதலால் விபரீதம்: நீரில் மூழ்கி 3 பேர் பலி!

Pagetamil

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

Leave a Comment