பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சுதாகர். ‘கல்லுக்குள் ஈரம்’, ‘சுவரில்லாத சித்திரங்கள்’, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘மாந்தோப்பு கிளியே’, ‘எங்க ஊரு ராசாத்தி’, ‘பொண்ணு ஊருக்கு புதுசு’, ‘அதிசயபிறவி’ உட்பட பல படங்களில் நடித்தார்.
பின்னர் தெலுங்குக்குச் சென்ற அவர், ஹைதராபாத்தில் செட்டிலானார். அங்கு நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் உடல்நிலை குறித்து திடீர் வதந்தி பரவியது. இதையடுத்து வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ள சுதாகர், “நான் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். தயவு செய்து பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம். எதையும் உண்மை தெரியாமல் பகிரவோ, மற்றவர்களுக்கு அனுப்பவோ வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
నా పై రూమర్స్ నమ్మకండి.. నేను ఎలా ఉన్నానో చూడండి#comedian sudhakar#Tollywood@CinemaPosts pic.twitter.com/M7BVUVnVp9
— CINEMA POSTS (@CinemaPosts) May 25, 2023