யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கூரைக்கு மேலேறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சிறைக்கைதி இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் சிறைச்சாலை அதிகாரிகளினால் கீழே இறக்கப்பட்டுள்ளார்.
சிறைக் கைதி தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றசெயல்களில் ஈடுபட்டு கைதாகி குருவிட்ட சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த குறித்த கைதி, யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து தன்னை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி நேற்று சனிக்கிழமை மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று மதியம் கீழே இறக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் மாத்தறையைச் சேர்ந்த புஷ்பகுமார (41) என்பவரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு கீழே இறக்கப்பட்டு போராட்டம் முடித்து வைக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1