நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.
சிங்கப்பூர் செல்வதற்காக இன்று (28) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி புலனாய்வுப் பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது.
இந்த சந்தேக நபர் பௌத்தம் மற்றும் கலாசாரத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1