28.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

நாளை பரீட்சை எழுதவுள்ள மாணவனின் தந்தையை பலியெடுத்த ரிப்பர்

கிளிநொச்சி, ஏ9 வீதி, உமையாள்புரம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வீதி
விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

யாழ் வடமராட்சி ஆழியவளை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கலைரூபன் என்ற இளம்
குடும்பஸ்தரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

குறித்த நபர் விசுவமடு பகுதியிலிருந்து ஏ9 வீதியூடாக ஆழியவளை
நோக்கிச்சென்றுகொண்டிருந்த போது, பளை பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி
பயணித்த ரிப்பர் ரக வாகனம் உழவு இயந்திரம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட
போது முன்னாள் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ் விபத்து
ஏற்பட்டுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த கலைரூபன் சம்பவ
இடத்திலேயே பலியாகியுள்ளார்.

விபத்தில் பலியானவரின் மகன் நாளை (29) இடம்பெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப்
பரீட்சைக்கு தோற்றும் மாணவனாவார்.

விபத்தினை தொடர்ந்து ரிப்பர் சாரதி கிளிநொச்சி நோக்கி பயணித்து
கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்கு அருகில் ரிப்பர் வாகனத்தை விட்டுவிட்டு
தப்பிச் சென்றுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலீஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பதுளைக்கு விஷேட ரயில் சேவை

east tamil

அஸ்வெசும நலன்களுக்கு நிலுவைத் தொகை இன்று முதல் வங்கி கணக்குகளில்!

east tamil

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு நீடிக்கும் – ருவன் செனரத் தகவல்

east tamil

3 வருடங்களுக்கு முன் நிதி மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

east tamil

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களிடம் கோரிக்கை

east tamil

Leave a Comment