நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி மழை காரணமாக திட்டமிட்டபடி நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டி இரவு 09:40 மணிக்குள் தொடங்கினால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படமால் போட்டி முழுவதுமாக நடத்தப்படும் என தெரிவிக்காகப்பட்டுள்ளது. இரு அணிகளும் 5 ஓவர்கள் கொண்ட இன்னிங்ஸ்களில் விளையாட இரவு 11:56 கட்-ஓஃப் நேரமாக அறிவிக்கப்பட்டது.
இன்று போட்டி மழை காரணமாக நடத்தப்படவில்லை என்றால் நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாளைய தினம் ‘ரிசர்வ் டே’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது.
எனினும், தற்போதைய நிலையில் கட் ஓவ் நேரமாக 12.06 அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மைதான பகுதியில் இரவு 8.50 மணிக்கு மீளவும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.அதனால் இரவு 9.40 மணிக்குள் ஆட்டம் ஆரம்பிப்பது சந்தேகமாகியுள்ளது.
இந்தப் போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றால் 5வது முறையாக ஐபிஎல் சம்பியன் வென்ற அணி என்ற அந்தஸ்தை மும்பைக்கு அடுத்ததாக எட்டும். அதே போல குஜராத் வென்றால் மும்பை அணிக்கு அடுத்ததாக தொடர்ந்து இரண்டு சீசன்களில் பட்டம் வென்ற அணி என சாதனை படைக்கும்.
Scenarios for the night:
9️⃣:4️⃣0️⃣ – Full Game
1️⃣1️⃣:5️⃣6️⃣ – Five Over Game
No Game – Reserve Day Tomorrow#CSKvGT #IPL2023 🦁💛— Chennai Super Kings (@ChennaiIPL) May 28, 2023