வயிற்றுவலிக்கு சூனியம் காரணமென நம்பிய யுவதிக்கு நேர்ந்த கதி: கஞ்சா ரொட்டியும், கசிப்பும் வழங்கி வல்லுறவுக்குள்ளாக்கிய முல்லைத்தீவு சாமியார்!

Date:

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் போலிச் சாமியாரால் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

20 வயதான யுவதிக்கு கஞ்சா கலந்து தயாரிக்கப்பட்ட ரொட்டியும், கசிப்பும் அருந்த வைத்து, போலிச் சாமியாரால் பாலியல் வல்லுறுவுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

முத்தையன்கட்டு, ஜீவநகரில் இந்த சம்பவம் நடந்தது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை பாதிக்கப்பட்ட யுவதியும், பெற்றோரும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

முத்தையன்கட்டை சேர்ந்த 20 வயதான யுவதிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. யுவதியின் பெற்றோருக்கு அறிமுகமான இருவர், ஜீவநகருக்கு வரும் போலிச்சாமியார் ஒருவரை பற்றி குறிப்பிட்டு, அவரிடம் அனுப்பினால் குணமடைய வைப்பார் என தெரிவித்தனர்.

திருகோணமலையை சேர்ந்த 30 வயதான போலிச்சாமியார் ஒருவர் முத்தையன்கட்டு, ஜீவநருக்கு அடிக்கடி வந்து, பில்லி சூனியம் விரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

அவரிடம் யுவதியை அழைத்துக் கொண்டு பெற்றோரும், போலிச்சாமியாரை அறிமுகப்படுத்திய இருவரும் சென்றனர்.

யுவதிக்கு இறைச்சி சாப்பிட்டதால் விசம் பரவியுள்ளதுடன், கல்லும் உருவாகியுள்ளது. அதை 5 நாட்கள் பூசையின் மூலம் அகற்றலாம் என போலிச்சாமியார் கூறியுள்ளார். ஆனால், யுவதியை தனியாகவே  அனுப்ப வேண்டுமென கூறியுள்ளார்.

போலிச்சாமியாரின் பேச்சை நம்பிய பெற்றோர், யுவதியை தனியாக போலிச்சாமியாரிடம் அனுப்பியுள்ளனர்.

பூஜை செய்து, சூனியம் விரட்ட வேண்டுமென குறிப்பிட்டு, அறையொன்றுக்கு யுவதியை அழைத்துச் சென்றுள்ளார் போலிச்சாமியார். அந்த வீட்டு உரிமையாளரான பெண்ணை, வீட்டு வாசல் கதவில் காவலுக்கு நிற்க வைத்துள்ளார்.

யுவதிக்கு கஞ்சா கலந்து தயாரிக்கப்பட்ட ரொட்டியை கொடுத்து உண்ண வைத்ததுடன், கசிப்பும் கொடுத்து பருக வைத்துள்ளார்.

பின்னர் யுவதியின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி, சூனியம் விரட்டுவதாக கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன், யுவதியை பலவந்தமாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்க முயன்ற போதும், யுவதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது அந்தரங்க உறுப்பு மந்திரக்கோல் என்றும், வயிற்றில் உள்ள விசத்தை உறிஞ்சி, கல்லை கரைக்க வைக்கும் சக்தியுள்ளது என குறிப்பிட்டு, யுவதியை பலவந்தமாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளார்.

யுவதியின் முறைப்பாட்டை தொடர்ந்து திருகோணமலையை சேர்ந்த 30 வயதான போலிச்சாமியார், அவர் சூனியம் விரட்டும் பூஜைகள் செய்து வந்த ஜீவநகர் பகுதியிலுள்ள வீட்டு உரிமையாளரான பெண், போலிச்சாமியரிடம் யுவதியின் பெற்றோரை அறிமுகப்படுத்தி வைத்த இருவர் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட யுவதி மருத்துவ பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்