குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தனது வதிவிட விசாவை ரத்து செய்ததை எதிர்த்து, பிரித்தானிய பிரஜையான கெய்லி பிரேசர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது.
சட்டக் கட்டணமாக ரூ.500,000 செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
எதிர்மனுதாரர்கள் தாக்கல் செய்த பூர்வாங்க ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.துரைராஜா மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் நீதிபதி முர்து பெர்னாண்டோ இந்த வழக்கின் தீர்ப்பை திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.
வதிவிட விசாவில் இந்த நாட்டில் தங்கியிருந்த மனுதாரர் போராட்டத்தில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
நாட்டில் தங்குவதற்கு விசா வழங்கப்பட்டாலும், ஓகஸ்ட் 10, 2022 அன்று குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் அதை ரத்து செய்ய முடிவு செய்தார். பின்னர் ஓகஸ்ட் 15, 2022 க்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறுமாறு அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
பிரித்தானிய பெண் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார். குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் உட்பட மூவர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.