தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் கிராமப் பகுதியில் வியாபாரப் பொருட்களை ஏற்றி வந்த வாகனத்தில் இருந்தவர்கள், சிறுமிகளுக்கு இனிப்புப் பொருட்களை வழங்கி, அவர்களை கடத்த முற்பட்ட நிலையில், பொதுமக்களினால் அவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்..
இனிப்பு பொருட்களை வழங்கி, சிறுமிகளை கடத்த முற்பட்ட போது, சிறுமிகள் தப்பிச் சென்று, கிராம மக்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, கிராம இளைஞர்கள் வாகனத்தை விரட்டிச் சென்று, மடக்கிப் பிடித்தனர்.
வாகனத்தில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இருந்தார் என சிறுமிகள் தெரிவித்தனர்.
எனினும், வாகனத்தை சோதனையிட்ட போது அவ்வாறானவர்கள் இருக்கவில்லை. கைதான இருவரும் தலைமன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மன்னாரில் இனிப்பு வழங்கி பல சிறுவர்களை கடத்த முற்பட்டதாக காரில் சென்ற இருவர் மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து மன்னாரில் உள்ள பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை விசேட பாதுகாப்பை வழங்க பொலிஸாரும் பாதுகாப்பு தரப்பினரும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் இரு பாடசாலை மாணவர்களும் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து இரண்டு பிள்ளைகளின் பெற்றோர்கள் அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
காரை கண்டுபிடிக்கும் வரை மன்னாரில் உள்ள பாடசாலைகளுக்கு பாதுகாப்பு வழங்க பாதுகாப்பு படையினரும் பொலிஸாரும் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குழந்தைகளை கடத்துவதற்காக இந்த கார் வந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.