25.6 C
Jaffna
December 23, 2024
Pagetamil
இலங்கை

பிரித்தானிய யுவதியின் மனு தள்ளுபடி: ரூ.500,000 செலுத்த உத்தரவு!

குடிவரவு மற்றும் குடியகல்வு  கட்டுப்பாட்டாளர் தனது வதிவிட விசாவை ரத்து செய்ததை எதிர்த்து, பிரித்தானிய பிரஜையான கெய்லி பிரேசர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது.

சட்டக் கட்டணமாக ரூ.500,000 செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

எதிர்மனுதாரர்கள் தாக்கல் செய்த பூர்வாங்க ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.துரைராஜா மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் நீதிபதி முர்து பெர்னாண்டோ இந்த வழக்கின் தீர்ப்பை திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.

வதிவிட விசாவில் இந்த நாட்டில் தங்கியிருந்த மனுதாரர் போராட்டத்தில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாட்டில் தங்குவதற்கு விசா வழங்கப்பட்டாலும், ஓகஸ்ட் 10, 2022 அன்று குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் அதை ரத்து செய்ய முடிவு செய்தார். பின்னர் ஓகஸ்ட் 15, 2022 க்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறுமாறு அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

பிரித்தானிய பெண் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார். குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் உட்பட மூவர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

24வது ஆண்டில் மிருசுவில் படுகொலை

east tamil

யாழ் மாவட்டத்துக்கு வெளியில் கடமையாற்றாத ஆசிரியர்களுக்கு விரைவில் இடமாற்றம்!

Pagetamil

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு நீக்கம்

east tamil

தனங்கிளப்பில் தாறுமாறாக தறிக்கப்படும் பனைகள்: சாவகச்சேரி பொலிசார் ‘பம்மி’யதன் பின்னணி என்ன?

Pagetamil

பாடசாலை ஆரம்பிக்கும் திகதி பற்றிய அறிவிப்பு

Pagetamil

Leave a Comment