26.3 C
Jaffna
December 25, 2024
Pagetamil
கிழக்கு

கிழக்கு மார்க்கத்தில் புகையிரத சேவை பாதிப்பு!

திருகோணமலையில் இருந்து சீதுவை நோக்கி கோதுமை ஏற்றிச் சென்ற புகையிரதம் இன்று அதிகாலை மஹவ புகையிரத நிலையத்தில் தடம் புரண்டமையினால் கிழக்கு புகையிரத போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணிக்கும் இரவு அஞ்சல் புகையிரதமும், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் நகரங்களுக்கு இடையிலான அதிவேக புகையிரதமும், மஹவயில் இருந்து மட்டக்களப்பு வரை இயங்கும் கலப்பு புகையிரதமும் தாமதமாக இயக்கப்பட வேண்டியுள்ளது.

அதிகாலையில் இயக்கப்பட வேண்டிய அஞ்சல் புகையிரதம் அதிகாலை 5.15 மணியளவில் தாமதமாக இயக்கப்பட்டது.

புகையிரதம் தடம் புரண்டதால் தண்டவாளம் சேதமடையவில்லை, புகையிரத பாதுகாப்புப் பெட்டியின் இரண்டு செட் சக்கரங்களும், மாவு ஏற்றிச் செல்லும் ஒரு பெட்டியின் ஒரு சக்கரமும் தடம் புரண்டன.

கிழக்கிலிருந்து வரும் புகையிரத பயணிகள் மஹவ சந்திப்பில் இடமாற்றம் செய்யப்படுவதாகவும், கோதுமை புகையிரதம் அகற்றப்பட்டதும் போக்குவரத்து வழமைக்கு திரும்பும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

50 அடி உயரம் கொண்ட நத்தார் மரம் திறந்து வைப்பு!

east tamil

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் நத்தார் நள்ளிரவுத் திருப்பலி

east tamil

திருக்கோணமலை DCCயில் மீண்டும் தமிழ் தேசியத்தின் குரல் முடக்கம்

east tamil

பேத்தாழை துறைமுக பிரதேச சர்ச்சையை கேட்டறிந்த சாணக்கியன்

Pagetamil

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு (DCC) கூட்டம்

east tamil

Leave a Comment