வெசாக் பௌர்ணமி தினமான நேற்று வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்கடுவ வீதியில் மலியதேவ லென் விகாரைக்கு அருகில் உள்ள சிறிய விகாரைக்கு அருகில் ஐந்து நாட்களே ஆன சிசு ஒன்று கிடந்துள்ளது.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் பேரில் வத்தேகம காவற்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று சிசுவை கைப்பற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சிசு சில மணி நேரங்கள் அங்கு இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர். வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிசு பின்னர் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
குழந்தையை இந்த இடத்தில் விட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்து வத்தேகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.