50,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் அம்பாறை, தமன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக அம்பாறை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் வழக்கில், சாதகமாக தகவல்களை வழங்க நபர் ஒருவரிடமிருந்து பணத்தை பெற்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தமன வரிப்பட்சேன பிரதேசத்தில் இலஞ்சப் பணத்தை பெற்ற போது, சார்ஜன்ட் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் சார்ஜன்ட் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1