புதிய ஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சியின் பிரதான மேதினக் கூட்டமும், ஊர்வலமும் வவுனியாவில் இன்று (01) காலை இடம்பெற்றது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய ஊர்வலம் கடைவீதிவழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து வவுனியா மாநகரசபை மண்டபத்தை அடைந்தது. அங்கு மேதினக்கூட்டம் இடம்பெற்றது.
கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ம. பகிதரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தேசிய அமைப்பாளர் வே. மகேந்திரன், வன்னி மாவட்டங்களின் செயலாளர் நி. பிரதீபன், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பின் இணைத் தலைவர் பூ. சந்திரபத்மன், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி சார்பாக கே. ஜிந்திசன், தொழிற்சங்கம் சார்பாக க. மகேந்திரன், பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின் சார்பில் சிவந்தினி ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினர்.
குறித்த ஊர்வலத்தில் கட்சிஉறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
-வவுனியா நிருபர் ரூபன்-