ஆயுர்வேத வைத்தியரான இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் களுத்துறை வடக்கில் வீடொன்றின் பின்னால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கு கலிடோ வீதியில் வசிக்கும் விக்கிரமாரச்சிகே பிரேமாவதி என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் இன்று காலை வீட்டின் பின்புறம் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பல விசேட பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1