நடிகை சமந்தாவுக்கு ஆந்திராவில் பெருமளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில், குண்டூர் அருகே உள்ள பாபட்லா மாவட்டம், அலபாடு கிராமத்தை சேர்ந்த சந்தீப் எனும் ரசிகர், சமந்தாவுக்கு கோயில் கட்டி வருகிறார். இதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.
இதுகுறித்து சந்தீப் கூறும்போது, “சமந்தா, பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் பல சேவைகளை செய்து வருவதை அறிந்து அவர் மீது மதிப்பு கூடியது. இதனால் அவருக்கு கோயில் கட்ட தீர்மானித்தேன். இதற்கு எங்கள் வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி கோயில் கட்டி வருகிறேன். தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை திறப்பு விழா நடக்கிறது” என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1