25.4 C
Jaffna
December 29, 2024
Pagetamil
குற்றம்

அமெரிக்க கோடீஸ்வரர் போல் நடித்து 42 வயது பெண்ணுக்கு பேஸ்புக்கில் காதல் வலை வீசி, பண மோசடி செய்த 38 வயதானவர் கைது!

அமெரிக்காவில் வாழும் இலங்கை கோடீஸ்வரர் போல் நடித்து, பேஸ்புக் வழியாக 42 வயது பெண் ஒருவரை போலியாக காதலித்து ரூ. 4.8 மில்லியன் மோசடி செய்த, 38 வயதான திருமணமான ஒருவரை ஏப்ரல் 28 வரை விளக்கமறியலில் வைக்க  நீர்கொழும்பு பிரதான நீதவான் சம்பிகா ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

சந்தேக நபர் நீர்கொழும்பு பிடிபன வீதியை வசிப்பிடமாகக் கொண்டவராவார். நீர்கொழும்பு பிரிவு மோசடி விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த உண்மைகளின்படி, இந்த பெண்ணுக்கு முகநூல் பக்கம் உள்ளதுடன், சந்தேகநபர் போலியான முகநூல் பக்கத்தையும் உருவாக்கி அதனூடாக அவருடன் காதல் உறவை வளர்த்து வந்துள்ளார்.

சந்தேகநபர் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை கோடீஸ்வரர் போல் காட்டிக்கொண்டு பேஸ்புக் ஊடாக இந்த உறவை பேணி வந்துள்ளார்.

மோசடியில் சிக்கிய பெண்ணுக்கு, விரைவில் இலங்கைக்கு வந்து திருமணம் செய்து அமெரிக்கா அழைத்துச் செல்வதாக முகநூல் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் மூலம் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

பெண்ணுடன் சிறிது காலம் டேட்டிங் செய்த பிறகு, சந்தேக நபர் இந்த பெண்ணை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு, தனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவசர அறுவை சிகிச்சைக்காக தனக்கு ரூ. 4.8 மில்லியன் தேவையென கேட்டுள்ளார்.

பணத்தை வசூலிக்க அண்ணனை அனுப்புவார் என்றும். இலங்கைக்கு வந்தவுடன் பணத்தை திருப்பித் தருவதாகவும் உறுதியளித்திருந்தார்.

பின்னர், அந்த பெண்ணிடம் சென்று, கோடீஸ்வரனின் சகோதரன் தானேயென குறிப்பிட்டு, பணத்தை பெற்றுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

4 வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்த 2வது கணவன்!

Pagetamil

வடமராட்சியில் 12 சைக்கிள் திருடிய எமகாதகன் கைது!

Pagetamil

குடு சலிந்து பிணையில் விடுதலை!

Pagetamil

Leave a Comment