இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அதன்போது, மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர்கள், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான உறவை எடுத்துரைத்ததுடன், பல்வேறு நெருக்கடிகளில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த இந்திய அரசாங்கத்தை பாராட்டினர்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான உறவுக்காக உயர்ஸ்தானிகர் மல்வத்து மகாநாயக்கருக்கு நன்றி தெரிவித்தார்.
புதுதில்லியில் நடைபெற்ற உலக பௌத்த மாநாட்டின் தொடக்க உரையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பங்களிப்பைப் பாராட்டிய மகாநாயக்கர்கள், மோடியின் பௌத்தத்தின் நெருக்கம் வார்த்தைகளில் மட்டுமல்ல, செயலிலும் தெரிகிறது என்றனர்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான படகுச் சேவைகள் தொடர்பில் கேட்டறிந்த மல்வத்து பீட மகாநாயக்க தேரர், இந்த வேலைத்திட்டம் இரு நாட்டு பொது மக்களுக்கும் பயனளிக்கும் என வலியுறுத்தினார்.