அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில்மழை குறுக்கிட்டபோதும், இலங்கை ஆட்டத்தின் கட்டுப்பாட்டை வைத்துள்ளது. இன்றைய 3வது நாள் ஆட்ட நேர முடியில் இலங்கை 1 விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்களை குவித்துள்ளது.
அயர்லாந்தின் 492 என்ற முதல் இன்னிங்ஸ் ஓட்டத்தை விட, இலங்கை இன்னும் 135 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. ஆனால் 9 விக்கெட் கைவசமுள்ளது.
இலங்கை தரப்பில் திமுத் கருணாரத்ன- நிஷான் மதுஷ்க ஜோடி சதமடித்தனர். மதிய உணவுக்கு சற்று முன்பு 115 ஓட்டங்களுடன் கருணாரத்ன ஆட்டமிழந்தார்.
பிட்சின் மேற்பரப்பு இன்னும் பந்துகளில் திருப்பங்களை காண்பிக்கவில்லை. இதனால் அயர்லாந்தின் ஸ்பின்னர்கள் களத்தில் சிரமப்பட்டனர். இலங்கையை எப்படி கட்டுப்படுத்துவதென தெரியாமல் அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் திணறி வருகிறார்கள்.
இலங்கை இன்னிங்ஸில் ஓவருக்கு 4.63 விகிதத்தில் ஓட்டங்களை பெற்றுள்ளது.
இன்று 59 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. தேநீருக்கு சிறிது நேரத்திற்கு முன்பு மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. நேற்றும் ஆட்டம் பாதிக்கப்பட்டிருந்தது.
நிஷான் மதுஷ்க 234 பந்துகளில் 149 ஓட்டங்களுடனும், குசல் மெண்டிஸ் 96 பந்தில் 83 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
தொடக்க ஆட்டக்காரர்கள் திமுத் கருணாரத்ன- நிஷான் மதுஷ்க ஜோடி இணைப்பாட்டமாக 228 ஓட்டங்களை குவித்தனர். மதுஷ்க- மென்டிஸ் ஜோடி 129 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுள்ளனர்.
இருந்தது. மழையால் 59 ஓவர்கள் மட்டுமே முடிந்தது.
81/0 என்ற நேற்றைய ஸ்கோருடன் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை சரளமாக ஓட்டங்களை குவித்தது. கருணாரத் ஆரம்ப ஓவர்களில் இருந்து சரளமாக ஓட்டங்களை குவித்தார்.
அயர்லாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் மக்பிரைனின் பந்துவீச்சு மட்டுமே, இலங்கை வீரர்களிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் மற்ற பந்துவீச்சாளர்களை இலங்கை வீர்கள் பிரித்து மேய்ந்து விட்டனர். அறிமுக இடது கை சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ ஹம்ப்ரேஸின் 8 ஓவர்களில் 56 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். லெக்ஸ்பின்னர் பென் வைட் 17 ஓவர்களில் 5.35 என்ற சராசரியில் 91 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.
போட்டியின் முதல் செசனின் இறுதியில் கருணாரத்ன 116வது பந்தில் 16வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். 133 பந்துகளில் 115 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
குசல் மென்டிஸ் இறங்கி அதிரடியாக ஆடி வருகிறார். அவர் 96 பந்துகளில் 83 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். 72வது ஓவரில் ஹம்ப்ரீஸை தொடர்ந்து மூன்று சிக்ஸர்களுக்கு அடித்தார்.
நாளை போட்டியின் 4வது நாள்.