27.3 C
Jaffna
January 16, 2025
Pagetamil
சினிமா

‘இந்தி வேண்டாம், தமிழில் பேசுங்க’: மனைவியிடம் சொன்ன ரஹ்மான்

விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன் மனைவியை மேடையில் “இந்தியில் பேச வேண்டாம், தமிழில் பேசுங்கள்” என்று கூறிய வீடியோ பதிவு கவனம் பெற்று வைரல் ஆகி வருகிறது.

அண்மையில் சென்னையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் இருந்தபோது நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், அவரது மனைவி சாயிராவையும் மேடைக்கு வருமாறு அழைத்தனர். அவர் மேடைக்கு வந்து ரஹ்மான் அருகில் நின்றதும் அவரிடம் ’ஏ.ஆர்.ரஹ்மான், ‘இந்தியில் வேண்டாம், தமிழில் பேசவும்’ என்று கூறுகிறார். உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் ஆர்ப்பரிக்க, சாயிரா புன்னகையுடன் ‘கடவுளே’ என்று சொல்லிவிட்டு பேச ஆரம்பிக்கிறார்.

“அனைவருக்கும் மாலை வணக்கம். மன்னிக்கவும். என்னால் தமிழில் சரளமாகப் பேச இயலாது. தயவுசெய்து பொறுத்துக் கொள்ளவும். நான் இன்று மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். காரணம் எனக்கு அவர் குரல் ரொம்பவே பிடிக்கும். நான் அவரது குரலைக் கேட்டே அதில் காதல் கொண்டேன். அதுமட்டும்தான் என்னால் சொல்ல முடியும்” என்றார்.

ரஹ்மான் கடந்த 1995 ஆம் ஆண்டு சாயிரா பானுவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கத்தீஜா, ரஹீமா மற்றும் அமீன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

Leave a Comment