முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்யவோ, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யவோ இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது மேன்முறையீட்டு நீதிமன்றம்.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து தப்புல டி லிவேரா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவில் தம்மை ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்தமை தொடர்பில் அவர் தனது சட்டத்தரணிகள் ஊடாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக இன்று TID முன் ஆஜராகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் டி லிவேராவுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
ஏப்ரல் 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் அவர் TID முன் ஆஜராகுமாறும் கோரப்பட்டது.
எவ்வாறாயினும், இதற்கு முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களிலும், முன்னாள் சட்டமா அதிபர், TID முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்ய முடியாத நிலை குறித்து பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அறிவித்திருந்தார்.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக TID முன் ஆஜராகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ஆட்சிக்கவிழ்ப்பு இருப்பதாக அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பான தகவல்களை அவர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, தனது பதவியை விட்டு வெளியேறிய தினத்தில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்த கருத்து தொடர்பில் குறிப்பிட்டார்.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் நம்பகத்தன்மையை இது பாதிக்கும் என்பதால், அந்தக் கோரிக்கை தொடர்பாக முன்னாள் சட்டமா அதிபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அமைச்சர் ராஜபக்ஷ கூறினார்.