Pagetamil
இலங்கை

யாழ் நகர மையத்தில் திடீரென தோன்றிய நீரூற்று: குடாநாட்டு நீர் விநியோக திட்டத்தை ஆராய வந்த வெளிநாட்டவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

புலம்பெயர்ந்து நீண்டகாலம் ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் கல்வியிலாளர் ஒருவர், அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார். யாழ்ப்பாண குடாநாட்டின் குடிநீர் பிரச்சினைக்கு  பொருத்தமான தீர்வுகள் பற்றிய களஆய்வில் ஈடுபடுவமே இவரது யாழ்ப்பாண வருகையின் நோக்கம்.

கடந்த சில வாரங்களாக துறைசார்ந்த உத்தியோகத்தர்களுடன் இணைந்து அந்த பணியில் ஈடுபட்டிருந்தார்.

ஆறுமுகம் திட்டம், இரணைமடு குளநீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வருதல், கடல்நீரை சுத்திகரித்தல், பாலியாறு திட்டம், வடமராட்சி நீர்த்தேக்க திட்டம் என யாழ்ப்பாண குடாநாட்டிற்கான குடிநீர் திட்ட சாத்தியங்கள் பற்றிய சாதக, பாதகங்களை உள்ளடங்கிய கள அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அவர், இன்று யாழ்ப்பாண நகரத்துக்கு வந்திருந்தார்.

மத்திய பேருந்து நிலையத்துக்கு அண்மையிலுள்ள அங்காடித் தொகுதிக்குள் அவர் சென்ற போது, எதிர்கொண்ட சம்பவத்தையே இந்த வீடியோவாக பதிவு செய்தார்.

அங்குள்ள குழாய் ஒன்று உடைந்து நீர் வீணாக விரயமாகிக் கொண்டிருந்தது. அந்த பகுதியிலுள்ள கடைகளிலிருந்தவர்களிற்கும் அது பற்றிய பொறுப்புணர்வு இருக்கவில்லை.

அவரே சென்று நீர் வெளியேறுவதை தடுக்க முடியுமா என முயற்சித்து பார்த்தார். யாரோ ஒருவர் வந்து நீர் வெளியேறுவதை நிறுத்த முயற்சிப்பதை பார்த்த அயலிலுள்ள கடைக்காரர்கள், ஏன் இந்த வேண்டாத வேலைகள் பார்க்கிறீர்கள் என்ற தோரணையில் கேட்டுள்ளனர்.

நீண்டநேரமாக குழாய் உடைந்து நீர் வெளியேறிக் கொண்டிருப்பதாகவும், அது பற்றி யாழ் மாநகரசபைக்கு நீண்டநேரத்துக்கு முன்னரே அறிவித்து விட்டதாகவும், அவர்கள் உரிய நடவடிக்கையெடுக்கவில்லையென்றும் கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

போதாதற்கு, இது மாநகரசபைக்குரிய விவகாரம். அவர்களின் சொத்துக்கள். நாம் அதை சரி செய்ய முயன்றால், அவர்களின் சொத்துக்களில் கைவைத்ததாக வீண் சிக்கல்களும் வரும் என அவரை எச்சரித்தும் விட்டார்கள். அந்த மனிதரும் சம்பவத்தை வீடியோ எடுத்துக் கொண்டு வந்து விட்டார்.

இன்று வியாழக்கிழமை. நாளை புதுவருடம். சனி, ஞாயிறு விடுமுறை. திங்கட்கிழமைதான் மாநகரசபையினர் வந்து அதை சரி செய்வார்கள் என கடைக்காரர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதை கேட்டதும், அந்த மனிதருக்கு பெரிய பதற்றம். யாழ்ப்பாணத்தில் குடிநீர் இல்லையென எல்லோரும் அங்கலாய்க்கிறார்கள், எப்படி குடிநீரை கொண்டு வரலாமென ஐரோப்பாவிலிருந்து பணம் செலவிட்டு வந்து ஆய்வு செய்கிறோம், இங்கு இப்படியான நிலைமையிலிருக்கிறதே என அங்கலாய்த்த அவர், இந்த விவகாரத்தை எப்படியாவது மாநகரசபையின் கவனத்திற்கு கொண்டு சென்று, நீர் விரயமாவதை இன்றே சரி செய்ய முடியுமா என கேட்டு இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.

அந்த வீடியோவே இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்!

Pagetamil

இலங்கையின் ஒற்றைக்கண் சிறுத்தையின் புகைப்படத்தை மோடிக்கு பரிசளித்த சஜித்!

Pagetamil

மோடியின் இலங்கை வருகை: புதிய காட்சிகளும் கவனிக்க வேண்டிய யதார்த்தங்களும்

Pagetamil

குனிந்து காட்டிய அநாகரிகம்… வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்!

Pagetamil

அனுர, மோடி திறந்து வைத்த திட்டங்கள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!