24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
கிழக்கு

நாட்டு கஞ்சாவினை கடத்தியவர் அதிரடிப்படையினரால் கைது

மோட்டார் சைக்கிளில் நாட்டு கஞ்சாவினை கடத்திய சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (9) மாலை விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் (வயது -59)மண்டூர் பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் மேற்குறித்த நாட்டு கஞ்சா போதைப்பொருளை கடத்தி செல்வதற்காக தயாராக இருந்த வேளை அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள வேப்பயடி சந்தியில் வைத்து சந்தேக நபர் மோட்டார் சைக்கிளுடன் கைதானார்.

இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் இருந்து தொலைபேசி ஒன்று 1 கிலோ 50 கிராம் பொதி செய்யப்பட்ட நாட்டு கஞ்சா ஒரு தொகை பணம் மோட்டார் சைக்கிள் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.டி.டி நெத்தசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க மேற்பார்வையில் பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பி.பி.எம் டயஸ் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்டுகளான பண்டார(13443),வீரகோன் (33354 ), பெரேரா (71664), பொலிஸ் கன்ஸ்டபிள்களான சதீப்(90616) , நிமேஸ் (90699) , வாகனச்சாரதி டபிள்யு.எம் குணபால (19401) ,அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்தே இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் சவளக்கடை பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த குறித்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் மாறுவேடத்தில் சென்று நீண்ட போராட்டத்தின் பின்னர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காயங்கேணி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப்பொருள்

east tamil

செய்தியாளர் மீது தாக்குதல் – நான்கு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Pagetamil

திருகோணமலை நகர சபையின் முன்னேற்றகரமான செயற்பாடு

east tamil

மூன்றாங் கட்டை மலை விவகாரம்: மூதூரில் சமூக நீதிக்கான போராட்டம்

east tamil

திருக்கோணமலையில் மீண்டும் ஒரு சடலம்

east tamil

Leave a Comment