இலங்கையில் அண்மையில் எரிவாயு விலை குறைக்கப்பட்டதற்கு ஏற்ப சில உணவுப் பொருட்களின் விலைகளில் திருத்தம் செய்ய அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று (05) நள்ளிரவு முதல் மதிய உணவுப் பொதி, கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 வீதத்தால் குறைக்கப்படும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
சாதாரண தேநீர் கோப்பையின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு ரூ. 30 இற்கு விற்கப்படும். பால் தேனீர் ஒரு கப் ரூ. 90.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1