தலைமன்னாரம், வெலிப்பாறையை அண்மித்த கடற்பரப்பில் இன்று (2) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான 4 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான தமன்னா, தலைமன்னார், வெலிப்பாறை கடற்பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடலில் மிதந்த பையை அவதானித்து ஆய்வு செய்ததில் 4 கிலோ 500 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஐஸ் போதைப்பொருள் நான்கு பார்சல்களில் பொதி செய்யப்பட்டிருந்தது.
இந்த ஐஸ் போதைப்பொருளின் மொத்த பெறுமதி 67.5 மில்லியன் ரூபாவாகும் என நம்பப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1