Pagetamil
கிழக்கு

ஈரோஸ் செயலாளரின் மகனையும், ஆதரவாளரையும் கொன்றவர்களிற்கு 25 வருடங்களின் பின் மரணதண்டனை

ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சியின் (ஈரோஸ்) செயலாளர் பிரபாகரனின் 3 வயது பிள்ளை மற்றும் கட்சி உறுப்பினர் ஆகிய இருவரை 1997 ம் ஆண்டு கொலை செய்தமை, 4 பேரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் காயப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவருக்கும் இன்று (29) மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

கடந்த 1997 ஆம் ஆண்டு மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அமைந்திருந்த ஈரோஸ் கட்சி காரியாலயத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், கட்சி ஆதரவாளர் ஒருவரும் இந்த கொலைகளை புரிந்தனர்.

அவர்களிற்கும் கட்சி செயலாளருக்கும் இடையே ஏற்பட்ட பிணக்கு காரணமாக 1997 ஜூலை 17ஆம் திகதி இந்த கொலை நடந்தது.

குற்றம்சாட்டப்பட்ட இருவரும் காரியாலயத்தில் தங்கியிருந்த கட்சி செயலாளர் மீதும், அவரது குடும்பத்தினர், கட்சி ஆதரவாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும்,வாளால் வெட்டியும் தாக்குதலை நடாத்தினர்.

இதில் கட்சி செயலாளரின் 3 வயது பிள்ளையான கிறேமன் கிஷான் மற்றும் கட்சி உறுப்பினரான சந்திரகுமார் ஆகிய இருவரும் உயிரிழந்ததுடன், பிரபாகரன் அவரது மனைவி மற்றும் கட்சி ஆதரவாளர்கள் இருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்த யோகநாதன் ஒரு கையையும், புவிராஜசிங்கம் இரு கையையும் இழந்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் சமீல ரஜீந்தர, கட்சி ஆதரவாளரான விவேகமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ள நிலையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் தொடர்ந்து கடந்த 25 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை இன்று மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் முன்னிலையில் எடுக்கப்பட்டது.

இதனை அடுத்து நீதிபதி குறித்த இருவரும் மனித படுகொலை மற்றும் காயத்தை ஏற்படுத்தியமை போன்ற 6 குற்றச்சாட்டுக்களில் தலா ஒருவருக்கு 3 இருந்து 5 வரையான குற்றச்சாட்டிற்கு 5 ஆயிரம் ரூபா அபதாரம் 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 6 குற்றச்சாட்டிற்கு தலா 5 ஆயிரம் ரூபாவும் 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியசிறத் தண்டனையும் முதலாவது இரண்டாவது குற்றச்சாட்டுக்களுக்கு மரணதண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை கடற்பரப்பில் ஆளில்லா விமானம்

east tamil

Update – 3 – கடலில் நீராட சென்ற 3 பேர் – மூவரின் சடலமும் மீட்பு

east tamil

Update 2 – கடலில் நீராட சென்ற 3 பேர்! – சிறுவனின் சடலம் மீட்பு

east tamil

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கு நியமனம்

east tamil

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு

east tamil

Leave a Comment