கோவை மாவட்டம் டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த ரமேஷ்(42), தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா(30). 2 குழந்தைகள் உள்ளனர். ரம்யா சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்து வருகிறார். அவ்வப்போது நல்லிகவுண்டம்பாளையம் வந்து செல்வார்.
இந்நிலையில், கடந்த 19ஆம் திகதி இரவு ரமேஷும் ரம்யாவும் இருசக்கர வாகனத்தில் முத்தூர் சாலையிலிருந்து நல்லிகவுண்டன்பாளையம் சென்று கொண்டிருந்தபோது, வழிமறித்த ஒருவர் ரமேஷை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். ரமேஷ், கோவை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பொள்ளாச்சி தாலுகா போலீஸார் விசாரணையில், ரம்யா தன்னுடன் நடித்துவரும் சின்னத்திரை துணை நடிகரான பீளமேடு டேனியல் சந்திரசேகர் மூலம் கணவரை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து டேனியல் சந்திரசேகர், ரம்யா ஆகியோரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர்.
போலீஸார் கூறும்போது, “சின்னத்திரையில் நடிக்க வேண்டாம் என ரமேஷ் கண்டித்து வந்துள்ளார். ரமேஷின் வீட்டை விற்பனை செய்வதிலும், இருவருக்கிடையே பிரச்சினை இருந்துள்ளது” என்றனர்.