உரம் பெறுவதற்கான ஆவணத்தில் கையொப்பமிடுவதற்கு மறுத்த விவசாய உத்தியோகத்தர் கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ளார். உரம் கிடைக்காத கோபத்தில் விவசாயியொருவர் இந்த கொடூர கொலையை செய்துள்ளார்.
நேற்று (27) தங்காலை, வெலியார பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
விவசாயத்திற்கு தேவையான உரத்தை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக விவசாய ஆராய்ச்சி அதிகாரியின் கழுத்தை அறுத்த நபரை தங்காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை 8.00 மணியளவில் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் கடமைக்கு சென்று கொண்டிருந்த போது, அவரை துரத்திச் சென்ற சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர், அப்பகுதி மக்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
சந்தேக நபர் விவசாயத்தை வாழ்வாதாரமாக மேற்கொண்டு வருகிறார். விவசாய உரம் பெறுவதற்குத் தேவையான கடிதம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவது தொடர்பாக அவருக்கும், விவசாய அதிகாரிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதுடன்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தேக நபர் விவசாய அலுவலரை பலமுறை அச்சுறுத்தியுள்ளார். 26ஆம் திகதி இரவு, சந்தேக நபர் அவரது வீட்டுக்குச் சென்றும் மிரட்டியுள்ளார்.